போதைப்பொருள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு சுற்றிவளைப்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது .

கப்பல் காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்த கப்பலில் இருந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்