போதைப்பொருள், கையடக்க தொலைபேசியுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டை – வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கசிரிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹாராமய, கோனகமுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 99 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 01 கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க