போதைப்பொருளுடன் இளம் ஜோடி கைது
கம்பஹா மாவட்டத்தின் பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த இளம் ஜோடி இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பகஸ்பிட்டிய, கந்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபர் மற்றும் அவிசாவளை மீகஹா கொடல்ல பிரதேசத்தைச் 22 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 32 வயதுடைய சந்தேகநபர் ஹிரியால பொலிஸாரினால் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் 26 கிராம் 250 மில்லி கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும் யுவதியிடம் 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
