
போதைப்பொருட்களுடன் மின்சார சபை ஊழியர் உட்பட 5 பேர் கைது
கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் மின்சார சபை ஊழியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஒருகொடவத்தை , வத்தளை மற்றும் கதிரானவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 முதல் 40 வயதுடைய ஐந்து நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, முச்சக்கர வண்டியில் போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த மின்சார சபை ஊழியர் உட்பட இருவர் மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்குளி கதிரானவத்தை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 18 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
