போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

களுத்துறை, தொடங்கொடை, லியனகொட பிரதேசத்தில் “ஜொன்டி” என்பவர் போதைப்பொருட்களுடன் தொடங்கொடை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கல்கெட்டியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய “ஜொன்டி” என்பவர் ஆவார்.

சந்தேக நபரான “ஜொன்டி” என்பவரிடமிருந்து 65 கிராம் ஐஸ் மற்றும் 45 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

“ஜொன்டி” என்பவர் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரை மத்துகம நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (30) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.