போதைக்கு அடிமையான இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-பதுளை நிருபர்-

ஊவா பரணகம லுனுவத்த பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

குடுவெவ, நஹகடியா, லுனுவத்த என்ற முகவரியில் வசித்து வந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின் பகுதியில் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த இளைஞன் சில காலமாக பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் எனவும்  குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.