போட்டி எரிபொருள் கொள்முதலை அறிமுகப்படுத்தும் இலங்கை மின்சார சபையின் முயற்சிகள் தோற்கடிப்பு

போட்டி எரிபொருள் கொள்முதலை அறிமுகப்படுத்தும் இலங்கை மின்சார சபையின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் அனல் மின்சார நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இந்த முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள், எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர்கள், எரிபொருள் தேவைகளுக்குப் போட்டி சர்வதேச ஏலத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

திறந்த ஏலத்தை அனுமதிப்பது குறைந்த விலை மின்சார உற்பத்தியை உறுதி செய்யும் என்றும், பொது நிதிகளைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேநேரம், இலங்கையின் எரிசக்தித் துறையைத் தேசிய கொள்கை மற்றும் சர்வதேச நிர்வாகத் தரங்களுடன் இணைக்கும் என்றும் , இலங்கை மின்சார சபையின் அனல் மின்சார நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.