
போட்டியிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்க
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.
இரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்று கிழமை இடம்பெறவுள்ள நிலையில் வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக ஜெஃப்ரி வான்டர்சே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள குறித்த போட்டி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
