போசாக்குணவு மேம்படுத்தல் செயற்திட்டம்
சிறுவர் நேய பாடசாலைகளில் போசாக்குணவு மற்றும் வீட்டுத் தோட்டங்களை மேம்படுத்தல் செயற்திட்டம்
ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார்கள் கல்வி கற்கும் சிறுவர் நேய பாடசாலைகளில் போசாக்கான உணவுகளை வழங்குவதோடுஇ தோட்டம் பயிரிடுதல்இ பயன்தரும் மரக்கன்றுகளை நடுதல் என்பன பற்றிய விழிப்புணர்வு செயலமர்வும் பயிர்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்குஇ வளவாளர்களாக ஆயுர்வேத சமுதாய வைத்திய அதிகாரி கே.எல். நக்பர்இ மத்திய மற்றும் மாகாண அரசுகளின் விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய பொறுப்பதிகாரிகளான எஸ்.ஏ.எல் அஸ்வர்இ எஸ்.ஏ.எல். பஹ்மி அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-கல்முனை நிருபர்-
மேலதிக செய்திகளுக்கு:- Minna24news
இவற்றையும் பார்வையிடலாம் :- போதைக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும்