
பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் புத்தளம், சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
கடந்த 14 ஆம் திகதி அன்று இரவு நடைபெற்ற மதுபான களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
