
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு
நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு வான்கதவில் இருந்து வினாடிக்கு 140 கன மீற்றர் நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
