பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

வவுனியா, நகரசபை மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சித்திரைக் கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது.

கண்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்கள், இராட்டினத்தில் சுற்றுதல், தலையில் நீர் கொண்டு செல்லல், சிறுவர்களை இராட்டினத்தில் ஏற்றி சுற்றுதல், மோட்டார் சைக்கிளில் பயணித்தல், வளையத்தின் ஊடாக பாய்தல், நெருப்பு வளையத்தின் ஊடாக பாய்தல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவரை விரட்டிப் பிடித்தல் போன்ற பல சாகச நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தன.

இதேவேளை மோப்ப நாய்களின் சாகசத்தை பார்ப்பதற்காக பலரும் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.