
பொலிஸ் நிலையத்தில் பெருமளவு தோட்டாக்கள் மாயம்
மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்தில் இருந்த 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸ் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதியை முழுமையாக சோதனையிட்ட போதும் வெடிமருந்துகள் கையிருப்பு கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த தோட்டாக்கள் எப்படி காணாமல் போனது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் இவை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
