பொலிஸ் சேவையில் பொதுமக்களுக்கான திருத்தப்பட்ட கட்டணம் அறிவிப்பு
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பயணம் மற்றும் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கான பொலிஸ் அனுமதி அறிக்கையைப் பெற 5,000 ரூபாய் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிபரப்பு அனுமதிகளுக்கான கட்டணம் கால அளவைப் பொறுத்தது, 6 மணித்தியாலங்களுக்கு 500 ரூபாயும் , 6 முதல் 12 மணித்தியலாளங்களுக்கு 1,000, ரூபாயும் மற்றும் 12 மணித்தியாலங்களுக்கு மேல் 2,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரதேசபொலிஸ் நிலையங்களால் வழங்கப்படும் பொலிஸ் அறிக்கைகளுக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படும், அதேநேரம் உள்நாட்டு நோக்கங்களுக்காக பொறுப்பதிகாரியால் வழங்கப்படும் அறிக்கைகளுக்கு 300 ரூபாயும், முறைப்பாடுகளின் நகல்கள் ஒரு பிரதிக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
