
பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் கைது
மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சாலியபுர முகாமில் கடமையாற்றும் சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார்.
கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டாரின் கம்பியை சார்ஜன்ட் உடைத்த சம்பவம் தொடர்பில். வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
