பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த குறித்த பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த அலுவலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் அவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்

சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.