பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சிகரெட் புகைக்க கொடுத்து கொள்ளை

கொழும்பு – பஸ்டியன் மாவத்தையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடமிருந்து 432,000 ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் கையடக்க தொலைபேசி என்பன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மிஹிந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணி ஒருவரை சந்திப்பதற்காக கொழும்பு சென்ற போதே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், கழிவறைக்கு அருகில் நின்ற இனந்தெரியாத ஒருவர் கொடுத்த பாதி புகைத்த சிகரெட்டை புகைத்துள்ளார். அதன் பின்னர் போதையாகி மயக்க நிலைக்கு சென்று விட்டார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதையாகி மயக்க நிலைக்கு சென்ற பின்னர் அவரது நகை மற்றும் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்