பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கடித்துக் குதறிய இளம் பெண்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் காலையும், மற்றொரு உத்தியோகஸ்தரின் விரலையும் கடித்ததால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடி காரணமாக இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குடிபோதையில் வாகனம் ஓட்டிய இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாரினால் அழைத்து வரப்பட்ட நிலையில் இரு இளைஞர்களில் ஒருவரின் காதலியே இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் பின்னர் யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.