பொலிஸ் உத்தியோகத்தரின் சர்ச்சைக்குரிய காணொளி: விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த காணொளி தொடர்பாக, பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கண்டி மாவட்டம் பிரிவு 1க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் விசாரணையின் போது தெரியவரும் உண்மைகளின் பிரகாரம் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்