பொலிஸார் வெளியிட்டுள்ள வெலிகம சஹானின் குற்றப்பட்டியல்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான வெலிகம சஹான் என அழைக்கப்படும் ஹிக்கடுவை லியனகே சஹான் சிசிகெலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நேற்று திங்கட்கிழமை இரவு சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
வெலிகமவைச் சேர்ந்த 31 வயதான இந்த சந்தேக நபர், மாத்தறை மற்றும் பாணந்துறை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர், “ஹரக்கட்டா” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் உதவியாளராகவும், “மிதிகம சூட்டி” மற்றும் “குடு சலிந்து” ஆகியோரின் முக்கிய துப்பாக்கிதாரியாகவும் செயல்பட்டவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுகள்:
பொலிஸார் வெளியிட்டுள்ள குற்றப் பட்டியலின்படி, சந்தேக நபர் பின்வரும் குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்:
2025.04.29: ஹிரண பொலிஸ் பிரிவில், T-56 துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பிரதான துப்பாக்கிதாரியாக அடையாளம் காணப்பட்டார்.
2025.06.05: மட்டக்குளிய பொலிஸ் பிரிவில், T-56 மற்றும் 9mm துப்பாக்கிகளால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், T-56 துப்பாக்கியைப் பயன்படுத்திய துப்பாக்கிதாரியாக அடையாளம் காணப்பட்டார்.
2025.06.29: பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில், மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடையில் T-56 துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரியாக அடையாளம் காணப்பட்டார்.
2024.04.15: கொட்டவில பொலிஸ் பிரிவில், மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடியமை.
2024.04.22: மாலிம்பட பொலிஸ் பிரிவில், ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதாகக் கூறி 80,000 ரூபாய் பணத்தைத் திருடியமை.
2024.07.23: வெலிகம பொலிஸ் பிரிவில், வீதியில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 52,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸைத் திருடியமை.
2024.07.24: மாலிம்பட பொலிஸ் பிரிவில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடமிருந்து 150,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸைத் திருடியமை.
2024.08.24: திஹகொட பொலிஸ் பிரிவில், துப்பாக்கி முனையில் 450,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ், 35,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம் மற்றும் 450,000 ரூபாய் மதிப்புள்ள வளையல் ஆகியவற்றைக் கொள்ளையடித்தமை.
2024.08.05: கொட்டவில பொலிஸ் பிரிவில், பெண்ணொருவரின் தங்க நெக்லஸைத் திருடியமை.
2024.08.08: வெலிகம பொலிஸ் பிரிவில், நபர் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்தியமை.
2024.08.11: மாலிம்பட பொலிஸ் பிரிவில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடமிருந்து 95,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ் மற்றும் தங்க பதக்கத்தைத் திருடியமை.
2024.08.12: வெலிகம பொலிஸ் பிரிவில், வீதியில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 90,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸைத் திருடியமை.
2024.08.12: கொட்டவில பொலிஸ் பிரிவில், வீதியில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து தங்க நெக்லஸைத் திருடியமை.