பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
வியாபாரிகள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மோசடியாளர்கள், காலாவதியான பொருட்களை மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடும்.
எனவே, பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்