பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொலிஸ் மாஅதிபரின் அலுவலகத்துக்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு 9ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் 071 – 859 88 88 என்ற வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருந்தார்.
