
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி-தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு 9.30 மணி அளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கணை சந்திப்பகுதியில் வைத்து பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சாரதி டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் டிப்பர் வாகனம் காற்று போய் வீதியில் நின்றுள்ளது.
வாகனத்தின் சாரதி டிப்பரை அங்கேயே விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
மணலுடன் டிப்பரை கைப்பற்றிய பொலிஸார் தப்பிச்சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
