பொலிசாரால் தேடப்படும் மூன்று சந்தேக நபர்கள் : பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிசார்

அத்துருகிரியவில் கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ‘கிளப் வசந்த’ உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்த நிலையில், அது தொடர்பில் தேடப்படும் மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸாரும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் ‘சங்க” என்றழைக்கப்படும் தருகர வருண இந்திக டி சில்வா (அ.எண். 951350753ஏ) இரண்டாவது சந்தேக நபர் ‘சண்டி” என்றழைக்கப்படும் ஹரம்பேஜ் அஜித் ரோஹன (அ.எண்.199207801772), மூன்றாவது சந்தேக ‘பஹிரவாய” என்றழைக்கப்படும் முதுவடுர தரிந்து மதுசங்க டி சில்வா என பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு: 072-4222223 ,அதுருகிரிய பொலிஸ்: 071-8591657

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்