பொலன்னறுவை பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேர் விமானப்படையினரால் மீட்பு

ஹிங்குராக்கொடை தளத்தில் உள்ள 07வது படைப்பிரிவின் பெல் 212 ஹெலிகாப்டர் இன்று வரை 03 மீட்புப் பணிகளை முடித்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவையில் உள்ள மனம்பிட்டி பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன