
பொலன்னறுவை – சோமாவதி வீதியில் வெள்ளம்: போக்குவரத்து முற்றாகத் தடை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பொலன்னறுவை – சோமாவதி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வெள்ளம் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்று 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
