
பொலன்னறுவை அரிசி ஆலைகளில் விசேட சோதனை
பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளின் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதன்போது, அனைத்து பிரதான அரிசி வகைகளுக்கான விலைக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
