
பொறியில் சிக்கிய சிறுத்தை மரணம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்ட பகுதியில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த பொறியில் சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை அண்மித்த பகுதியொன்றிலேயே குறித்த சிறுத்தை சிக்கியுள்ளது.
தற்சமயம் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், கால்நடை வைத்தியரின் உதவியுடன் சிறுத்தையை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது குறித்த சிறுத்தை உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

