
பொருளாதார மீட்புத் திட்டம் யாரிடமாவது இருந்தால் நான் பதவி விலக தயார்
இன்றைய பாராளுமன்ற அமர்விற்கு ஜனாதிபதி வந்துள்ள நிலையில், ”கோ ஹோம் கோட்டா” என்று குரலெழுப்பி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டம் நடத்தியதால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதமரின் உரையின் போது எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தியதையடுத்து, நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது:
இதேவேளை, 6 மாதங்களுக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தக்கூடிய சிறந்த பொருளாதார மீட்புத் திட்டம் யாரிடமாவது இருந்தால், அதை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்றும், அதை ஏற்றுக்கொண்டால், தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக, ரணில் விக்கிரமசிங்க அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சபையில் தெரிவித்தார்.
