
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது நாடு
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான 4.9சதவீதம் நேர்மறை வளர்ச்சி வீதத்தை விட அதிகமாகும்.
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான இந்த 5.4 சதவீதம் வளர்ச்சி வீதம், நாடு முன்பு சந்தித்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருவதை குறிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
