பொரளையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
கொழும்பு – பொரளையில் சந்தேக நபர் ஒருவர் வெடிக்காத நிலையில் உள்ள வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை பகுதிய சேர்ந்த 24 யதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து ஒரு எல்.எம்.ஜி தோட்டா மற்றும் 7 ரி-56 வெடிக்காத நிலையில் உள்ள தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
