பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்

🎈நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கீரையில் இரும்பு சத்துக்கள் உள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு தினம் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது அவசியம். கீரையில் நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. அந்தவகையில் பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் பற்றி பார்ப்போம்.

🎈இந்த பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துங்கள் உள்ளது. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

🥦வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.

🥦பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.

🥦பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு வெகுவாக மேம்படும்.

🥦பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை அதிகரிக்கும். அதுவும் வாரம் ஒரு முறை பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். அதேபோல் பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும்.

🥦பொன்னாங்கண்ணி கீரை தண்ணீரில் கழுவி அதனை சிறிய சிறியதாக நறுக்கி பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து அதனை இறக்கி மசித்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தம் ஆகும்.

🥦உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

🥦பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

🥦இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.

🥦பொன்னாங்கண்ணி கீரை தினமும் எடுத்துக் கொள்வதால் உடல் பொலிவு பெறும். எப்போதும் முகம் பொலிவாக இருக்கும்.

🥦புதிதாக பிறந்திருக்கும் குழந்தைகள் முதல் 6 மாத காலம் வரை தாய்ப்பால் அருந்துவது மிகவும் அவசியம். ஆனால் ஒரு சில பெண்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய நிலையிலிருக்கும் பெண்கள் பொன்னாங்கன்னி கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24