பொத்துவில் பிரதேச செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்

 

-அம்பாறை நிருபர்-

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் பிரதேச செயலாளரால் சுதந்திர தினத்தையொட்டி மர நடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் பிரதேச செயலாளர் அரசாங்கத்தினுடைய தேசிய கொள்கை திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பிரதேச மற்றும் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். எம்.சுபைர் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் நிதி உதவியாளர் உட்பட கிளை தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.