பொது விடுமுறை எமக்கும் வேண்டும்: வைத்தியசாலை சிற்றூழியர்கள்

-மூதூர் நிருபர்-

மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பணிக்கு வராமையினால் வைத்தியசாலையின் நாளாந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

பொது விடுமுறை தினங்களில் தாம் கடமை புரிகின்ற போதிலும் விடுமுறை தினத்தில் வேலை செய்வதற்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை, வேலை செய்தும் எந்தவித பலனும் தமக்கு இல்லை. இதனால் இன்று பொது விடுமுறை எனவே அது தமக்கும் உரித்துடையது என தெரிவித்து அவர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று கடமைக்கு வராமையின் காரணமாக தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்கிருந்தமை சுட்டிகாட்ட தக்கது.