தலவாக்கலை-கிறேட்வெஸ்டன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் இருந்து பொது மக்கள் வெளியேறினர்

-சம்மாந்துறை நிருபர்-

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விசேட அறிவித்தலை பொதுமக்களுக்கு விடுத்துள்ளார்.

மூடப்படாத கிணறுகள்,குழாய்க்கிணறுகள்,நீர்த்தாங்கிகள்,கூரைப்பீலிகள்,பராமரிக்கப்பாடாத மலசலகூடங்கள்,மூடப்பட்டுள்ள வீடுகள்,பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள்,கடல் ஓரங்களில் காணப்படும் தோணிகள்,படகுகள் என்பன ஆட்கொல்லி டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு மிகவும் சாதகமான காரணியாக காணப்படுகின்றது.

எனவே அதனை நுளம்புவலைகளால் மூடுமாறும் நுளம்புகள் பெருகாத வண்ணம் தொடர்ச்சியாக பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அத்துடன் தங்களது சுற்றாடலில் நுளம்பு பெருகும் சாதனங்களை இல்லாதொழிக்குமாறும். மேற்படி நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களையும் தங்களது பிள்ளைச்செல்வங்களையும் டெங்கு நோயிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டப்படுவதோடு அறிவுறுத்தலை தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்திதுள்ளனர்.

ஆகவே, வருமுன் காப்போம்இ வளமாய் வாழ்வோம். டெங்கு மரணத்தை தவிர்ப்போம்.நீங்கள் எங்களுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.