
பொது மக்களுக்கான மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்
பொது மக்களுக்கான மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்
‘வளமான நாடு அழகான வாழ்க்கை “CLEAN SRILANKA” கிராமம் தோறும்
விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்’
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் “CLEAN SRILANKA” நடமாடும் வேலைத்திட்டம்.
இடம்: மட்டக்களப்பு / கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம்
திகதி: 2025.12.30
நேரம்: காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை
மேற்படி நலன்புரி வேலைத்திட்டத்தில் பின்வரும் சேவைகளை இலகுவாக, சிரமமின்றி விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
1. அஸ்வெசும மீள்சான்றுப்படுத்தல்.
2. அரச காணி தொடர்பான சேவைகள்.
3. முதியோர் அடையாள அட்டை வழங்கல்.
4. பொதுஜன மாதாந்த கொடுப்பனவு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற நோய்க்கொடுப்பனவு, மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
5. உளவள ஆலோசனை சேவைகள்.
6. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்.
7. ஆயுர்வேத சுகாதார சேவைகள்.
8. தொழில் வழிகாட்டல் சேவைகள்.
9. தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், பொலிஸ் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்படும்.
10. 2021ஆம் ஆண்டு பிறந்த பிள்ளைகளுக்கான புதிய வடிவிலான தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன்; ஏனைய பிறப்பு, இறப்பு, காலங்கடந்த பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
11. வியாபாரப் பெயர் பதிவினை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
12. பாடசாலை மாணவர்களுக்கான உளவள வழிகாட்டல்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் சேவைகள்.
13. பயிர்ச்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வழிகாட்டல்கள்.
14. சமுர்த்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் கடன் சேவைகள்.
15. ஆரக்ஷாவ (Arakshawa) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
மேலும் பல சேவைகள் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன், இந்நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தங்களுக்கான பயன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
