
பொது மக்களின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞன்
சூரியவெவ வெவேகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை திருடி செல்ல முயற்சித்த 3 இளைஞர்களில் ஒருவர் பிரதேச மக்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு சூரியவெவ பொலிஸ் அதிகாரிகள் வந்த போது சந்தேகநபரின் உடல்நிலை மோசமடைந்திருந்ததை அடுத்து அவர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
