பொது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

பொலன்னறுவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பொதுக்கிணற்றில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.