பொதுமக்களுக்கு 72%, அரச உத்தியோகத்தர்களுக்கு 28% எரிபொருள் விநியோகம்

-யாழ் நிருபர்-

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72மூ அரச உத்தியோகத்தர் களுக்கு 28மூ எரிபொருள் விநியோகம்….யாழ் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.

இதன்போது, நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் வரும் எரிபொருளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, பொதுமக்களுக்கு 72% மான எரிபொருட்கள் விநியோகிப்பதாகவும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 28% மான எரிபொருள்களை விநியோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதில் 6600 லீற்றர் கொள்கலன் கொள்வனவு உள்ள பவுசரில் 1250 மோட்டார் சைக்கிளுக்கும், 500 முச்சக்கரவண்டிகள், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பொதுப்பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களும், அரச சேவையில் ஈடுபடும் அத்தியாவசிய சேவையில் உள்ளவர்களில் 600 மோட்டார் சைக்கிள்களும், 50 கார் வாகனங்களும் பெற்றோல் பகிர்ந்தளிக்கப்படும் என யாழ் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்..