பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பண்டிகை காலங்கள் மற்றும் சிறப்புக் கொண்டாட்டங்களின் போது ஒளியூட்டப்பட்ட லாந்தர் விளக்குகளை (Sky Lanterns) பறக்கவிடுவதால் ஏற்படக்கூடிய தீவிபத்து அபாயங்கள் குறித்து இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத் தோன்றினாலும்,அவை தீப்பிழம்புகளால் மேலெழுந்து கட்டுப்பாடின்றி பறந்து செல்லக்கூடும்.

இதனால் பட்டாசு களஞ்சியசாலைகள், எரிபொருள் நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் அல்லது பொது மக்கள் நெரிசல் நிறைந்த இடங்கள் போன்ற இடங்களில் தரையிறங்கக்கூடும்.

இவ்வாறான சூழல்கள் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய தீவிபத்துக்கு வழிவகுத்து, பெரும் சொத்து சேதத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஒளியூட்டப்பட்ட லாந்தர் விளக்குகள் பறக்கவிடப்பட்டதை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக ஆபத்துள்ள இடத்திலோ அல்லது மக்கள் செறிவான பகுதியிலோ ஒரு விளக்கு தரையிறங்கினால், அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.