பொதுமக்களுக்கு சிறப்பு தொலைபேசி இலக்கம்

நாட்டில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக பொது மக்கள் விசேட நடவடிக்கை பிரிவுக்கு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசர சேவை இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டவர்களின் அடையாளங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.