
பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்
வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதிக விலை கொடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில், பெற்றுக்கொண்டுள்ளமை யுக்திய போதைப்பொருள் விசேட சோதனை நடவடிக்கையின் போது தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக, வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது, அவதானத்துடன் செயற்படுமாறு பிரதி பொலிஸ்துறைமா அதிபர் பொலிஸ் துறை பேச்சாளர் நிஹால் தல்துவ வலியுறுத்தியுள்ளார்.
