பொதுப்போக்குவரத்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!

ஜூலை 1 முதல் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பொறியாளர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.

1 ஒக்டோபர் 2011 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம், ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று மோட்டார் போக்குவரத்துச் சட்டம் திருத்தப்பட்டாலும், பல ஓட்டுநர்கள் இந்த விதியை, குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகளில், தொடர்ந்து புறக்கணிக்கின்றனர்.

தற்போது அமுல்படுத்தப்படவிருக்கும் நடைமுறை, போக்குவரத்துத் துறையில் அதிக பொறுப்புணர்வு மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று ஆணைக்குழு வலியுறுத்தியது.