பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்ற சென்ற இலங்கை வீரரை காணவில்லை

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 161 பேர் கொண்ட இலங்கை வீரர்கள் குழுவில் ஒரு தடகள வீரர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

காணாமல் போன இந்த மல்யுத்த வீரரை இங்கிலாந்து பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த திங்களன்று, பொதுநலவாய விளையாட்டு கிராமத்தில் இருந்து ஒரு ஜூடோ வீராங்கனையும் இலங்கை ஜூடோ அணியின் மேலாளரும் காணாமல் போயிருந்தனர்

இந்நிலையில் மல்யுத்த வீரர் நேற்று வியாழன் தடகள வீரர் கிராமத்தை விட்டு வெளியேறியதாக இலங்கையின் ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த மூவருக்கும் ஆறு மாதங்களுக்குச் செல்ல செல்லுபடியாகும் விசாக்கள் உள்ளன.

எனவே அவர்கள் காணாமல் போனதற்கான காரணங்கள் குறித்து எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வருவது கடினம் என்று பொதுநலவாய விளையாட்டுகளுக்கான இலங்கை அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போதல் சம்வங்களை அடுத்து இலங்கை விளையாட்டு வீரர்கள் தற்போது கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை பாதுகாப்பிற்காக அந்தந்த விளையாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.