
பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுகின்றது
நாடாளுமன்றத்தை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கலைக்கப்பட்டது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுகிறது.
