பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளன

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு முதல் கலைத்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, புதிய பாராளுமன்றம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ள அதேவேளை, வேட்புமனுத் தாக்கல் காலம் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.