பொதுச் சொத்துக்களை ஊழல் மோசடிக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை!

பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அவற்றை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்கதும் செயற்திறன் மிக்கதுமான சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானதாகும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மூன்று வருடங்களில் வலுசக்தித் துறையின் இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும், மக்களுக்கு வழங்கக்கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால நிவாரணங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்