பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு கோரிக்கை
பொதுச் சுகாதார பரிசோதகர் எனக் கூறி வர்த்தகர்களிடம் சட்டவிரோதமான முறையில் பணம் அறிவிடுவோர் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடளிக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி சிலர் வர்த்தகர்களிடம் பணம் வசூலித்து வருவதாக பல முறைப்பாடுகள் தமது சங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்