பொகவந்தலாவ பகுதியில் மீட்கப்பட்ட சடலம்

பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.