பேலியகொடையில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதானவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியில் இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
